Friday, August 21, 2009

"""Roll Back"""


அழகிய காலை எட்டு பத்து
அவசர குளியல் அரைகுறை உணவு
எடுத்த ஓட்டம் உறங்கிய பாடம்
நீல டோக்கன் பத்தரை காண்டீன்
திரும்பிய நினைவு மறுபடி J-block

ஏழு நிமிட நடை கோவை வெயில்
எடுத்த தட்டு C-mess சுவை
யாருடைய சீப்போ பத்துநிமிடக் கண்ணாடி
அரைகுறை obsi வாங்கிய திட்டு
வண்ணத் தூவலாய் wireகள்
கருப்பாய் கால்களுடன் இதுதான் chips ?

NMB puff
உடன் நடுவினில் கடலை
Evening sunglass
எதற்கோ ? அதற்கே !
குளிர்ந்த கண்கள் அரைமணி அரட்டை
La-ball-
ல் over-gaugeக்கு
single-
எடுப்போம் தேசிய விளையாட்டு

கடலலை இல்லை மனங்கவர் கோவையில்
கடலை உண்டு சிற்றகவல் சேவையில்
HotKitchen
தோசைக்கடை Aaryas மெஸ்-
பிரிவோம் இணைவோம் மறுபடியும்
தாத்தாக் கடை நள்ளிரவு இதுதான் chips

ரௌத்திரம் பழகி, புதியன விரும்பி,
கலை வளர்த்து, காதல் செய்தோம்.
கனவுகள் நிறைந்த கல்லூரி நாட்கள்,
றைகள் அண்டாத ஆனந்தப் பூக்கள்.